This site is under maintenance. Some functionality may not be work properly. Sorry for the inconvenience caused.
1. ஆத்மமே, உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து,
மீட்பு, சுகம், ஜீவன், அருள்
பெற்றதாலே துதித்து,
அல்லேலூயா, என்றென்றைக்கும்
நித்திய நாதரைப் போற்று.
2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய் துதி;
கோபங் கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி;
அல்லேலூயா, அவர் உண்மை
மா மகிமையாம், துதி.
3. தந்தைபோல் மா தயை உள்ளோர்;
நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம் கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே!
அல்லேலூயா, இன்னும் அவர்
அருள் விரிவானதே.
4. என்றும் நின்றவர் சமுகம்
போற்றும் தூதர் கூட்டமே
நாற்றிசையும் நின்றெழுந்து
பணிவீர் நீர் பக்தரே
அல்லேலூயா, அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே.
1. உம்மைத் துதிக்கிறோம், யாவுக்கும் வல்ல பிதாவே
உம்மைப் பணிகிறோம், ஸ்வாமி, ராஜாதி ராஜாவே;
உமது மா மகிமைக்காக, கர்த்தா,
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே.
2. கிறிஸ்துவே, இரங்கும் சுதனே, கடன் செலுத்தி,
லோகத்தின் பாவத்தை நீக்கிடும் தெய்வாட்டுக்குட்டி,
எங்கள் மனு கேளும்; பிதாவினது
ஆசனத் தோழா, இரங்கும்.
3. நித்திய பிதாவின் மகிமையில் இயேசுவே, நீரே
பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே.
ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்
உன்னத கர்த்தரே, ஆமேன்.
1.உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம்;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம்.
2.பாவம் நிறைந்த பூமிக்கு,
இரண்டாம் ஆதாமே.
போரில் சகாயராய் வந்தார்
ஆ, நேச ஞானமே!
3.முதல் ஆதாமின் பாவத்தால்
விழுந்த மாந்தர்தாம்
ஜெயிக்கத் துணையாயினார்;
ஆ ஞான அன்பிதாம்!
4.மானிடர் சுபாவம் மாறவே,
அருளைப்பார்க்கிலும்
சிறந்த ஏது தாம் என்றே
ஈந்தாரே தம்மையும்.
5.மானிடனாய் மானிடர்க்காய்
சாத்தானை வென்றாரே;
மானிடனாய் எக்கஸ்தியும்
பட்டார் பேரன்பிதே!
6.கெத்செமெனேயில், குருசிலும்
வேதனை சகித்தார்;
நாம் அவர்போன்றே சகித்து
மரிக்கக் கற்பித்தார்.
7.உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம்;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம்.
1.உன்னதரே நீர் மகிமை,
இந்நிலம் சமாதானத்தை அடைய அன்பு ஓங்க!
பராபரனார் கர்த்தாவே,
பரம ராஜர் பர்த்தாவே வல்லமை தந்தாய், வாழ்க!
தாழ்ந்து வீழ்ந்து,
போற்றுவோமே புகழ்வோமே தொழுவோமே!
மாட்சி மேன்மைக்கென்றும் ஸ்தோத்ரம்.
2.பிதாவின் ஒரே மைந்தனே,
சுதாவே கர்த்தா ராஜரே, தெய்வாட்டுக்குட்டி நீரே!
பார் மாந்தர் பாவம் போக்கிடும்
மா தந்தை பக்கல் ஆண்டிடும் மகத்துவ கிறிஸ்து நீரே;
கேட்பீர் ஏற்பீர்
ஏழை நீசர் எங்கள் ஜெபம் தாழ்வாம் வேண்டல்;
இரங்குவீர் தயவோடே.
3 நீர் தூயர் தூயர் தூயரே,
நீர் கர்த்தர் கர்த்தர் கர்த்தரே, என்றென்றும் ஆள்வீர் நீரே!
பிதாவின் ஆசனத்திலே
மேதையாய் வீற்றுப் பாங்கினில் கர்த்தாவாம் ஆவியோடே,
இன்றும் என்றும்
ஏக மாண்பு ஏக மாட்சி ஏக மேன்மை
தாங்கி ஆள்வீர் தேவரீரே.
1 எல்லாம் சிஷ்டித்த நமது
தயாபர பிதாவுக்கு
அநந்த காலமாக,
அல்லேலூயா! மகத்துவம்,
பலம், புகிழ்ச்சி, தோத்திரம்
உண்டாய் இருப்பதாக;
பார்ப்பார், காப்பார்.
வல்லமையும் கிருபையும்
அன்பும் எங்கும்
அவர் செய்கையால் விளங்கும்.
2 மண் நீசருக்கு மீட்பரும்
கர்த்தாவுமாம் சுதனுக்கும்
ரட்சிப்பின் அன்புக்காக,
அல்லேலூயா! புகழ்ச்சியும்
அநந்த ராஜரீகமும்
உண்டாய் இருப்பதாக;
பாவம், சாபம்
எந்தத் தீங்கும் அதால் நீங்கும்,
என்றென்றைக்கும்
பாக்கியம் எல்லாம் கிடைக்கும்.
3 மனந்திரும்பி எங்களை
பர்த்தாவாம் இயேசுவண்டையே
அழைத்து, நேர்த்தியாக
சிங்காரிக்கும் தேவாவிக்கும்,
அல்லேலூயா! புகழ்ச்சியும்
வணக்கமும் உண்டாக;
வான, ஞான
வாழ்வினாலும் செல்வத்தாலும்
தேற்றிவாறார்,
அதின்முன் ருசியைத் தாறார்.
4 எல்லா சிஷ்டிகளாலேயும்
பிதா குமாரன் ஆவிக்கும்
அநந்த காலமாக,
அல்லேலூயா! மகத்துவம்,
பலம், புகழ்ச்சி, தோத்திரம்
உண்டாய் இருப்பதாக
ஆமேன், ஆமேன்!
நீர் அநந்தம், ஆதியந்தம்,
பரிசுத்தம்,
பரிசுத்தம், பரிசுத்தம்.
1.இரத்தம் காயம் குத்தும் நிறைந்து, நிந்தைக்கே
முள் கிரீடத்தாலே சுற்றும் சூடுண்ட சிரசே,
முன் கன மேன்மைகொண்ட நீ லச்சை காண்பானேன்?
ஐயோ வதைந்து நொந்த உன் முன் பணிகிறேன்.
2.நீர் பட்ட வாதை யாவும் என் பாவப் பாரமே;
இத்தீங்கும் நோவும் சாவும் என் குற்றம் கர்த்தரே,
இதோ, நான் என்றுஞ் சாக நேரஸ்தன் என்கிறேன்;
ஆனாலும் நீர் அன்பாக என்னைக் கண்ணோக்குமேன்.
3.நீர் என்னை உமதாடாய் அறியும் மேய்ப்பரே;
உம் ஜீவன் ஊறும் ஆறாய் என் தாகம் தீர்த்தீரே;
நீர் என்னை போதிப்பிக்க அமிர்தம் உண்டேனே;
நீர் தேற்றரவளிக்க பேரின்பமாயிற்றே.
4.உம்மண்டை இங்கே நிற்பேன் என்மேல் இரங்குமேன்;
விண்ணப்பத்தில் தரிப்பேன் என் கர்த்தரை விடேன்;
இதோ, நான் உம்மைப் பற்றி, கண்ணீர் விட்டண்டினேன்;
மரிக்கும் உம்மைக் கட்டி அணைத்துக் கொள்ளுவேன்.
5.என் ஏழை மனதுக்கு நீர் பாடுபட்டதே
மகா சந்தோஷத்துக்கு பலிக்கும், மீட்பரே,
என் ஜீவனே, நான் கூடி இச்சிலுவையிலே
உம்மோடென் கண்ணை மூடி மரித்தால் நன்மையே.
6.நான் உம்மைத் தாழ்மையாக வணங்கி நித்தமே
நீர் பட்ட கஸ்திக்காக துதிப்பேன், இயேசுவே;
நான் உம்மில் ஊன்றி நிற்க சகாயராயிரும்;
நான் உம்மிலே மரிக்க கடாட்சித்தருளும்.
7.என் மூச்சொடுங்கும் அந்த கடை இக்கட்டிலும்
நீர் எனக்காய் இறந்த ரூபாகக் காண்பியும்;
அப்போ நான் உம்மைப் பார்த்து கண்ணோக்கி நெஞ்சிலே
அணைத்துக்கொண்டு சாய்ந்து, தூங்குவேன், இயேசுவே.
1.துக்கம் கொண்டாட வாருமே,
பாரும்! நம் மீட்பர் மரித்தார்;
திகில் கலக்கம் கொள்ளுவோம்;
இயேசு சிலுவையில் மாண்டார்.
2.போர் வீரர், யூதர் நிந்தித்தும்;
மா பொறுமையாய்ச் சகித்தார்;
நாமோ புலம்பி அழுவோம்;
இயேசு சிலுவையில் மாண்டார்.
3.கை காலை ஆணி பீறிற்றே,
தவனத்தால் நா வறண்டார்;
கண் ரத்தத்தாலே மங்கிற்றே;
இயேசு சிலுவையில் மாண்டார்.
4.மும்மணி நேரம் மாந்தர்க்காய்,
தம் மௌனத்தாலே கெஞ்சினார்;
நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே
இயேசு சிலுவையில் மாண்டார்.
5.சிலுவையண்டை வந்துசேர்,
நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்;
ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்;
இயேசு சிலுவையில் மாண்டார்.
6.உருகும் நெஞ்சும் கண்ணீரும்
உள்ளன்பும் தாரும், இயேசுவே;
மாந்தர்மீதன்பு கூர்ந்ததால்
நீர் சிலுவையில் மாண்டீரே!
1.கூர் ஆணி தேகம் பாய
மா வேதனைப்பட்டார்;
பிதாவே இவர்கட்கு
மன்னிப்பீயும்; என்றார்.
2.தம் ரத்தம் சிந்தினோரை
நல் மீட்பர் நிந்தியார்;
மா தெய்வ நேசத்தோடு
இவ்வாறு ஜெபித்தார்.
3.எனக்கு அவ்வுருக்கம்
எனக்கே அச்செபம்;
அவ்வித மன்னிப்பையே
எனக்கும் அருளும்.
4.நீர் சிலுவையில் சாக
செய்ததென் அகந்தை;
கடாவினேன், இயேசுவே
நானுங் கூர் ஆணியை.
5.உம் சாந்தக் கண்டிதத்தை
நான் நித்தம் இகழ்ந்தேன்;
எனக்கும் மன்னிப்பீயும்
எண்ணாமல் நான் செய்தேன்.
6.ஆ, இன்ப நேச ஆழி!
ஆ, திவ்விய உருக்கம்!
நிந்திப்போர் அறியாமல்
செய் பாவம் மன்னியும்.
1.உம் ராஜியம் வருங்காலை, கர்த்தரே,
அடியேனை நினையும் என்பதாய்
சாகும் கள்ளன் விஸ்வாச நோகாலே
விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய்.
2.அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்
எவ்வடையாளமும் கண்டிலாரே;
தம் பெலனற்ற கையை நீட்டினார்;
முட் கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே.
3.ஆனாலும், மாளும் மீட்பர் மா அன்பாய்
அருளும் வாக்கு, இன்று என்னுடன்
மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்
என்பதுவாம் - விஸ்வாசத்தின் பலன்.
4.கர்த்தாவே, நானும் சாகும் நேரத்தில்
என்னை நினையும்; என்று ஜெபித்தே
உம் சிலுவையை, தியானம் செய்கையில்
உம் ராஜியத்தைக் கண்ணோக்கச் செய்யுமே.
5.ஆனால், என் பாவம் நினையாதேயும்,
உம் ரத்தத்தால் அதைக் கழுவினீர்;
உம் திரு சாவால் பாவமன்னிப்பும்
ரட்சிப்பும் எனக்காய்ச் சம்பாதித்தீர்.
6 என்னை நினையும்; ஆனால், உமக்கும்
என்னால் உண்டான துன்பம் கொஞ்சமோ?
சிலுவை, நோவு, ரத்த வேர்வையும்,
சகித்த நீர், இவை மறப்பீரோ?
7 என்னை நினையும், நான் மரிக்கும் நாள்,
நீயும் என்னோடு தங்குவாய் இன்றே
நற் பரதீஸில் என்னும் உம் வாக்கால்
என் ஆவி தேர்ந்து மீளச் செய்யுமே.
1.சிலுவையைப் பற்றி நின்று
துஞ்சும் மகனைக் கண்ணுற்று,
விம்மிப் பொங்கினார் ஈன்றாள்;
தெய்வ மாதா மயங்கினார்;
சஞ்சலத்தால் கலங்கினார்;
பாய்ந்ததாத்துமாவில் வாள்
2.பாக்கியவதி மாதா உற்றார்
சிலுவையை நோக்கிப் பார்த்தார்;
அந்தோ, என்ன வேதனை;
ஏக புத்திரனிழந்து,
துக்க சாகரத்தில் ஆழ்ந்து,
சோகமுற்றனர் அன்னை.
3.இணையிலா இடருற்ற
அன்னை அருந்துயருற
யாவரும் உருகாரோ?
தெய்வ மைந்தன் தாயார் இந்த
துக்க பாத்திரம் அருந்த,
மாதாவோடழார் யாரோ?
4.தம் குமாரன் காயப்பட,
முள்ளால் கிரீடம் சூட்டப்பட,
இந்த நிந்தை நோக்கினார்;
நீதியற்ற தீர்ப்புப்பெற
அன்பர், சீஷர் கைவிட்டோட,
அவர் சாகவும் கண்டார்
5.அன்பின் ஊற்றாம், இயேசு ஸ்வாமி,
உமதன்னைக்குள்ள பக்தி
என்தன் நெஞ்சில் ஊற்றிடும்;
அன்பினால் என் உள்ளம் பொங்க,
அனல் கொண்டகம் உருக
அருளைக் கடாட்சியும்.
1.துயருற்ற வேந்தரே,
சிலுவை ஆசனரே,
நோவால் வாடும் முகத்தை
இருள் திரை மூடிற்றே;
எண்ணிறந்த துன்பம் நீர்,
மௌனமாகச் சகித்தீர்.
2.பலியாக மரிக்கும்
வேளை வரும் அளவும்
மூன்று மணி நேரமாய்,
துணையின்றி மௌனமாய்
காரிருளில் தேவரீர்
பேயோடே போராடினீர்.
3.தெய்வ ஏக மைந்தனார்,
அபிஷேக நாதனார்,
தேவனே, என் தேவனே,
என்தனை ஏன் கைவிட்டீர்?
என்றுரைக்கும் வாசகம்
கேள், இருண்ட ரகசியம்!
4.துயர் திகில் இருண்டே,
சூழும் போது, தாசரை
கைவிடாதபடி நீர்
கைவிடப்பட்டிருந்தீர்;
இக்கட்டில் சமீபம் நீர்
என்றிதாலே கற்பிப்பீர்.
1.அருவிகள் ஆயிரமாய்
பாய்ந்து இலங்கிடச் செய்வார்,
அனைத்தும், ஆள்வோர், 'தாகமாய் இருக்கிறேன்' என்றார்.
2.வெம்போரில் சாவோர் வேதனை,
வியாதியஸ்தர் காய்ச்சலும்,
குருசில் கூறும் இவ்வொரே ஓலத்தில் அடங்கும்.
3.அகோரமான நோவிலும்,
மானிடர் ஆத்துமாக்களை
வாஞ்சிக்கும் தாகம் முக்கியம்; என் ஆன்மாவும் ஒன்றே.
4.அந்நா வறட்சி, தாகமும்;
என்னால் உற்றீர், பேர் அன்பரே;
என் ஆன்மா உம்மை முற்றிலும் வாஞ்சிக்கச் செய்யுமே.
1.பூரண வாழ்க்கையே!
தெய்வாசனம் விட்டு,
தாம் வந்த நோக்கம் யாவுமே
இதோ முடிந்தது!
2.பிதாவின் சித்தத்தை
கோதற முடித்தார்;
தொல் வேத உரைப்படியே
கஸ்தியைச் சகித்தார்.
3.அவர் படாத் துக்கம்
நரர்க்கு இல்லையே;
உருகும் அவர் நெஞ்சிலும்
நம் துன்பம் பாய்ந்ததே.
4.முள் தைத்த சிரசில்
நம் பாவம் சுமந்தார்;
நாம் தூயோராகத் தம் நெஞ்சில்
நம் ஆக்கினை ஏற்றார்.
5.எங்களை நேசித்தே
எங்களுக்காய் மாண்டீர்;
ஆ, சர்வ பாவப் பலியே,
எங்கள் சகாயர் நீர்.
6.எத்துன்ப நாளுமே,
மா நியாயத் தீர்ப்பிலும்,
உம் புண்ணியம், தூய மீட்பரே
எங்கள் அடைக்கலம்.
7.இன்னும் உம் கிரியையை
எங்களில் செய்திடும்;
நீர் அன்பாய் ஈந்த கிருபைக்கே
எம் அன்பு ஈடாகும்.
1.இப்போது, நேச நாதா, தலை சாய்த்து
தெளிந்த அறிவோடு ஆவியை
ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது;
பொங்கு நெஞ்சம் மூச்சற் றொடுங்கிற்றே.
2.சாமட்டும் சாந்தமாய் என் துக்கப் பாரம்
நீர் தாங்கி, மனதார மரித்தீர்;
உம் சாவில் பெலன் உற்றே, ஆவியையும்
அமைதலாய்த் தந்தைக் கொப்புவித்தீர்.
3.நல் மீட்பரே, சாவிருள் என்னைச் சூழ்ந்து
மரண அவஸ்தை உண்டாகையில்,
தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து,
ஒளி உண்டாகும் அச்சராவினில்.
4.நான் மாளும் போதும் சிலுவையைக் காட்டும்;
என் தலையை உம் மார்பில் அணைத்தே,
என் கடை மூச்சை அன்பாய் ஏற்றுக் கொள்ளும்;
அப்பால் உம் நித்திய ஓய்வு என்னதே.
1.பிதாவே, எங்களை கல்வாரியில்
நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே,
நரர்க்காய் விண்ணில் உம் சமூகத்தில்
பரிந்து பேசும் கிறிஸ்துவுடனே
ஒரே மெய்யான பலி படைப்போம்
இங்கே அதை உம்முன் பாராட்டுவோம்.
2.ஆ! எங்கள் குற்றம் குறை யாவையும்
பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமே
விஸ்வாசம் மங்கி, ஜெபம் குன்றியும்
உம் பேரருளைப் போக்கடித்தோமே;
என்றாலும், எங்கள் பாவம் ஆக்கினை
இடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை.
3.இவ்வேளை எங்கள் நண்பர்க்காகவும்
உம் சன்னிதானம் வேண்டல் செய்வோமே;
சிறந்த நன்மை யாவும் அளியும்;
உம் மார்பினில் அணைத்துக் காருமே
எத்தீங்கும் அணுகாமல் விலக்கும்;
உம்மில் நிலைக்கப் பெலன் அருளும்.
4.இவ்வாறு அண்டினோம் உம் சரணம்
மா சாந்தமுள்ள மீட்பரான நீர்
பேரின்பம் தரும் திவ்விய போஜனம்
கொடுப்பதாலும் தீமை நீக்குவீர்.
உற்சாகத்தோடு உம்மை என்றைக்கும்
சேவித்துப் பற்றத் துணை புரியும்.
1.வாழ்க, சிலுவையே வாழ்க!
பாரமற்ற பாரமே
உன்னை முழு மனதார
தோள்மேல் ஏற்றுக்கொள்வேனே.
2.இந்த நிந்தை லச்சை அல்ல,
இது வெட்கம் அல்லவே;
ஏனெனில் பொல்லாப்புக்கல்ல
நன்மைக்காக வருதே.
3.உலகத்தின் ஜோதியான
இயேசுதாமும் நிந்தைக்கே
ஏதுவாகி, ஈனமான
சிலுவையில் மாண்டாரே.
4.சிலுவை சுமந்தோராக
அவரைப் பின்பற்றுவோம்;
தீரங்கொண்டு வீரராக
துன்பம நிந்தை சகிப்போம்.
5.நேசர் தயவாய் நம்மோடு
சொல்லும் ஒரு வார்த்தையே,
துக்கத்தை எல்லாம் கட்டோடு
நீங்கிப்போகச் செய்யுமே.
6.சாகும்போது, திறவுண்ட
வானத்தையும், அதிலே
மகிமையினால் சூழுண்ட
இயேசுவையும் காண்போமே.
7.வாழ்க சிலுவையே! வாழ்க,
மோட்சத்தின் முன் தூதனே!
நீதிமான்கள் இளைப்பாற
நேர் வழியாம் வாசலே!
1.தம் ரத்தத்தில் தோய்ந்த அங்கி போர்த்து,
மாதர் பின் புலம்ப நடந்து;
2.பாரச் சிலுவையால் சோர்வுறவே,
துணையாள் நிற்கின்றான் பாதையே.
3.கூடியே செல்கின்றார் அப்பாதையே;
பின்னே தாங்குகின்றான் சீமோனே.
4.குரூசைச் சுமந்தெங்கே செல்லுகின்றார்?
முன் தாங்கிச் சுமக்கும் அவர் யார்?
2. மறுமொழி
5.அவர்பின் செல்லுங்கள் கல்வாரிக்கே,
அவர் பராபரன் மைந்தனே.
6.அவரின் நேசரே, நின்று, சற்றே
திவ்விய முகம் உற்று பாருமே.
7.சிலுவைச் சரிதை கற்றுக்கொள்வீர்;
பேரன்பை அதனால் அறிவீர்.
8.பாதையில் செல்வோரே; முன் ஏகிடும்
ரூபத்தில் காணீரோ சௌந்தரியம்?
3. சிலுவை சரிதை
9.குரூசில் அறையுண்ட மனிதனாய்
உம்மை நோக்குகின்றேன் எனக்காய்
10.கூர் முள் உம் கிரீடமாம், குரூசாசனம்;
சிந்தினீர் எனக்காய் உம் ரத்தம்.
11.உம் தலை சாய்க்கவோ திண்டு இல்லை;
கட்டையாம் சிலுவை உம் மெத்தை.
12.ஆணி கை கால், ஈட்டி பக்கம் பாய்ந்தும்,
ஒத்தாசைக்கங்கில்லை எவரும்.
13.பட்டப்பகல் இதோ ராவாயிற்றே,
தூரத்தில் நிற்கின்றார் உற்றாரே.
14.ஆ, பெரும் ஓலமே! தோய் சோரியில்
உம் சிரம் சாய்க்கிறீர் மார்பினில்.
15.சாகும் கள்ளன் உம்மை நிந்திக்கவும்,
சகிக்கின்றீரோ நீர் என்னாலும்?
16.தூரத்தில் தனியாய் உம் சொந்தத்தார்
மௌனமாய் அழுது நிற்கின்றார்.
17.இயேசு நசரேத்தான் யூதர் ராஜா
என்னும் விலாசம் உம் பட்டமா?
18.பாவி என்பொருட்டு மாளவும் நீர்
என்னில் எந்நன்மையை காண்கின்றீர்?
4. சிலுவையின் அழைப்பு
(குருவானவர் பாடுவது)
19.நோவில் பெற்றேன், சேயே; அன்பில் காத்தேன்;
நீ விண்ணில் சேரவே நான் வந்தேன்.
20.தூரமாய் அலையும் உன்னைக் கண்டேன்;
என்னண்டைக் கிட்டிவா, அணைப்பேன்.
21.என் ரத்தம் சிந்தினேன் உன்பொருட்டாய்;
உன்னைக் கொள்ள வந்தேன் சொந்தமாய்.
22.எனக்காய் அழாதே, அன்பின் சேயே;
போராடு, மோட்சத்தில் சேரவே.
5. இயேசுவை நாம் வேண்டல்
23.நான் துன்ப இருளில், விண் ஜோதியே,
சாமட்டும் உம் பின்னே செல்வேனே.
24.எப்பாரமாயினும் உம் சிலுவை,
நீர் தாங்கின் சுமப்பேன் உம்மோடே.
25.நீர் என்னைச் சொந்தமாய் கொண்டால், வேறே
யார் உம்மிலும் நேசர் ஆவாரே?
26.இம்மையில் உம்மண்டை நான் தங்கியே
மறுமையில் வாழ செய்யுமே.