உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
செப்பனியா 3:20
For I will make you a name and a praise among all people of the earth, when I turn back your captivity before your eyes, saith the LORD.
Zephaniah 3:20
நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
ரோமர் 6:14
For sin shall not have dominion over you: for ye are not under the law, but under grace.
Romans 6:14
எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
1 கொரிந்தியர் 10:4
And did all drink the same spiritual drink: for they drank of that spiritual Rock that followed them: and that Rock was Christ.
1 Corinthians 10:4
நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.
சங்கீதம் 4:5
Offer the sacrifices of righteousness, and put your trust in the LORD.
Pslams 4:5
அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.
ஆதியாகமம் 1:31
And God saw every thing that he had made, and, behold, it was very good. And the evening and the morning were the sixth day.
Genesis 1:31
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
சங்கீதம் 53:2
God looked down from heaven upon the children of men, to see if there were any that did understand, that did seek God.
Psalms 53:2
எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறப்பண்ணும்.
சங்கீதம் 85:4
Turn us, O God of our salvation, and cause thine anger toward us to cease.
Psalms 85:4
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்.
கலாத்தியர் 2:20
I am crucified with Christ: nevertheless I live; yet not I, but Christ liveth in me.
Galatians 2:20
நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச் சொன்னான்.
2 இராஜாக்கள் 5:10
Go and wash in Jordan seven times, and thy flesh shall come again to thee, and thou shalt be clean.
2 Kings 5:10
உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான்.
லூக்கா 5:25
And immediately he rose up before them, and took up that whereon he lay, and departed to his own house, glorifying God.
Luke 5:25
கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.
சங்கீதம் 116:1
I love the LORD, because he hath heard my voice and my supplications.
Psalms 116:1
நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்.
அப்போஸ்தலர் 16:25
And at midnight Paul and Silas prayed, and sang praises unto God.
Acts 16:25
கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.
2 கொரிந்தியர் 1:5
As the sufferings of Christ abound in us, so our consolation also aboundeth by Christ.
2 Corinthians 1:5
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
1 கொரிந்தியர் 3:16
Know ye not that ye are the temple of God, and that the Spirit of God dwelleth in you?
1 Corinthians 3:16
நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
கொலோசெயர் 3:1
If ye then be risen with Christ, seek those things which are above, where Christ sitteth on the right hand of God.
Colossians 3:1
உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
சங்கீதம் 40:16
Let all those that seek thee rejoice and be glad in thee: let such as love thy salvation say continually, The LORD be magnified.
Psalms 40:16
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.
ரூத் 2:12
A full reward be given thee of the LORD God of Israel, under whose wings thou art come to trust.
Ruth 2:12